தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!… அதிர்ச்சியில் உறைந்த தாய்!

தமிழகத்தில் குடிபோதையில் தாயிடம் தகாத வார்த்தைகள் கூறி சண்டையிட்டதால் மகனே தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 45), ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.இவரது மனைவி அமுதவள்ளி, மகன்கள் சச்சின்குமார் (வயது 17), சஞ்சய்குமார் (வயது 14) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.குடிப்பழக்கத்துக்கு அடிமையான கருப்பசாமி தினமும் குடித்துவிட்டு அமுதவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் நிம்மதியிழந்த அமுதவள்ளி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே சிறுமுகை அருகே வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.அப்போதும் விடாத கருப்பசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதுடன், நேற்று அமுதவள்ளிக்கு போன் செய்து, ”உன்னிடம் பேச வேண்டும், உடனே வா” என அழைத்துள்ளார்.இதனால் சச்சின்குமாரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்ற போது, குடிபோதையில் இருந்த கருப்பசாமி தகாத முறையில் பேசியுள்ளார்.இதனால் தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் முற்ற, ஆத்திரத்தில் கருப்பசாமி அரிவாளால் சச்சின்குமாரை வெட்ட முயன்றுள்ளார்.இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்க தந்தையிடம் இருந்த அரிவாளை பிடுங்கி சச்சின்குமார் வெட்ட படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார்.இதைபார்த்துக் கொண்டிருந்த அமுதவள்ளி அலற அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டனர், மதுவால் குடும்பமே சிதைந்து போனதை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம் அமுதவள்ளி.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *