நானும் வேணும், கணவனும் வேணுமாம்.. அதான்.. பெண்ணை ஊதாங்குழலிலேயே அடித்து கொன்ற 53 வயது பெயிண்ட்டர்!

“என்கூட வாழ சொன்னால், புருஷன்கூட வாழறேன்னு சொன்னாள்.. அதனால்தான் ஊதாங்குழலிலேயே அடித்து கொன்றேன்” என்று 52 வயது கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் கல்லந்தல்.. இங்கு வசித்து வருபவர் சுபாஷ்.. 52 வயது.. இவர் ஒரு பெயிண்டர்!பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. அங்கு சுவேதா என்ற பெண் அறிமுகமானார்.. சுவேதாவுக்கு கல்யாணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், குழந்தைகளுடன் வாழ்ந்த வந்த சுவேதா குடும்பத்தில் நுழைந்தார் சுபாஷ்! கல்யாணமே செய்து கொள்ளாத 52 வயது சுபாஷூக்கு சுவேதா மீது ஆசை வந்தது.. நாளடைவில் இவர்களுக்குள் கள்ள உறவும் ஆரம்பமானது.. அடிக்கடி இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். சுபாஷை அதிகம் நேசிக்க ஆரம்பித்தார் சுவேதாவும்.. அவரை ரொம்பவும் நம்பினார்.. 2 பேரும் சேர்ரந்து ஒன்றாக தண்ணி அடிப்பார்களாம்.. ஒருமறை சுவேதாவை அழைத்து கொண்டு சொந்த கிராமத்துக்கு வந்தார் சுபாஷ்.. ஆனால், இதற்கு சுபாஷின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் உறவை கைவிடவில்லை.
நேற்றுகூட ஸ்வேதாவும், சுபாஷூம் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. திடீரென சண்டை வந்துவிட்டது.. ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த சுபாஷ், பக்கத்தில் கிடந்த அடுப்பு ஊதாங்குழலை எடுத்து வந்து ஸ்வேதாவை அடித்தார்.. பிறகு அம்மிக்கல்லையும் தூக்கி வந்து அடித்தார்.. இதில் ஸ்வேதா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து ஸ்வேதா உடலை கைப்பற்றினர்.. சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.. அப்போது அவர் சொன்னதாவது: “நாங்க 2 பேரும் கணவன்- மனைவியாக வாழணும்னு முடிவு பண்ணிதான் இந்த ஊருக்கு வந்தோம்.. ஆனால், ஸ்வேதா திடீரென கணவன், குழந்தைகளை பார்க்க வேண்டும், வாழ வேண்டும் என்று சொல்லவும், எனக்கு கோபம் வந்துவிட்டது.. அதனால், அம்மிக்கல், ஊதாங்குழலால் அடித்து கொன்றேன்” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *