கள்ளக்காதலிற்கு இடையூறாக இருந்த மாமியை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள் கைது!

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரின் காதலர் போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் ராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். போலீசார் கூறும் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.

தொடர்ந்து அந்த நபரும் மருமகள் போனில் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை தீர்த்துக்கட்ட மருமகளும் அவரின் காதலரும் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பாம்பை கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றியுள்ளனர்.ஆனால், அக்கம்பக்கத்தினர் மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, போலீசார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *