நீங்களும் வெற்றியாளராக மாறவேண்டுமா..?இதோ அதற்கான 12 வழிமுறைகள்… அதிகம் கடைப்பிடியுங்கள்…தினம் தினம் வெற்றி காணுங்கள்…!

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! பிழைகள்:வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார். தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்.

எண்ண ஓட்டம்: வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக்கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர்.தோல்வியாளர்: எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு வலம் வருபவர் இவர். எந்தப் பிரச்னையையும் எதிர்மறைச் சிந்தனைகளுடனேயே அணுகுவார்.

பேச்சு: வெற்றியாளர்: அடிமட்ட அளவுக்கு இறங்கி, பிறரை இழிவாகப் பேச மாட்டார். புதுப்புது விஷங்களை, சமூகப் பார்வைகளை, அவர்களது கருத்துக்களை திட்டமிட்டு விவாதிப்பார்; கலந்துரையாடுவார்.தோல்வியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அல்லது ஏதாவது நிகழ்வுகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசுபவராக இருப்பார். புரளி பேசுவதையே பொழுதுபோக்காகக்கொண்டு செயல்படுவார்.

கருத்துகள்:வெற்றியாளர்: தன்னுடைய கருத்துகளை, வெற்றிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வார். பிறர் கூறும் அறிவுரைகளை நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்வார்.தோல்வியாளர்: தன்னுடைய வெற்றிகளைக்கூடப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார். பிறரின் அறிவுரைகளை விரும்பவே மாட்டார்.

குணம்:வெற்றியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நல்ல செயல்களை மதிப்பார்; மனதாரப் பாராட்டுவார். அனைத்துத் தரப்பினரையும் உயர்வாக மதிக்கும் குணம்கொண்டவராக இருப்பார்.தோல்வியாளர்: வெகு எளிதாக அனைவரையும் குறை கூறிவிடுவார்; அவர்களது வெற்றிகளையும் குறைகளாகவே சித்தரிப்பார்; எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்.

மன்னிக்கும் மனப்பான்மை:வெற்றியாளர்: தன்னைக் காயப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார். எதிரியையும் நண்பனைப்போல நேசிக்கும் பக்குவம்கொண்டவர்.தோல்வியாளர்: தன் மனதை காயப்படுத்தியவர்களை வெறுத்து ஒதுக்குவார். அவர்களை தனது வாழ்கையில் இருந்தே முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளைச் செய்வார்.

பொது நலமும் சுயநலமும்:வெற்றியாளர்: `எல்லாரும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும்; முன்னேற வேண்டும்’ என்கிற பொதுச் சிந்தனையோடு செயல்படுவார். எப்போதும் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் துடிப்பார் அதற்காகவே செயல்படுவார்.தோல்வியாளர்: தனக்கு உதவியவர்கள்கூட வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்கிற சுயநல எண்ணத்தோடு இருப்பார். `நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கு எப்போதும் தலைதூக்கி இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *