இப்படியும் நடக்கும் அக்கிரமங்கள்… தோற்றுப் போன சூதாட்டம்…! மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்த நண்பர்கள்…! கணவனே அனுமதித்த கொடூரம்.!

கட்டிய மனைவியை வைத்து சூதாடி உள்ளார் புருஷன்.. கடைசியில் சூதாட்டத்தில் தோற்றுப் போனதால், மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை இடம்பெற்றுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஜகான்பூரில் வசித்து வந்துள்ளனர் ஒரு தம்பதி. இதில் கணவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லையாம். அதிலும் குடியும், சூதாட்டமும்தான் இவரது பிழைப்பாக இருந்திருக்கிறது.எப்போதுமே வீட்டிலேயே குடித்துவிட்டு சூது விளையாடுவாராம். இவருடன் இணைந்து விளையாடுபவர்கள் நண்பர் அருண் மற்றும் சொந்தக்காரர் அனில் என்பவரும்தானாம். இப்படித்தான் சம்பவத்தன்றும் குடித்துவிட்டு சூதாட்டம் விளையாடி உள்ளனர்.ஆனால், பணம் காலியானதால், தனது மனைவியை இருவரும் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். அதன்படி அவரது மனைவியை இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அந்த பெண் அழுதுகொண்டே தனது மாமா வீட்டுக்கு பாதுகாப்புத் தேடிச் சென்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் காரை எடுத்து கொண்டு, அதில் அதே நண்பர்களையும் ஏற்றிக் கொண்டு, மனைவியின் பின் தொடர்ந்தார் . . அழுது ஓடிய தனது மனைவியை வழிமறித்து சமாதானப்படுத்தி மீண்டும் காரில் ஏற்றி கூட்டி வந்திருக்கிறார். ஆனால், கொடுமை.. காரிலேயே நண்பர்கள் 2 பேரும் மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதைக் கணவனே அனுமதித்துள்ளார்.இதையடுத்து, தன் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்த பெண், ஜாஃப்ராபாத் பொலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இந்த புகாரை ஏற்க பொலீசார் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, அந்தப் பெண், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றின் உதவியை நாடினார். இதற்குப் பிறகுதான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். மேலும் ,இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பொலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *