இரும்புத்தடி.. கத்தி.. உருட்டுக்கட்டைகள்: கொலைவெறி தாக்குதலால் போர்க்களமான ஜே.என்.யூ! (காணொளி )

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் கொலை வெறித்தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதியில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 70 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புத்தடி, கத்தி, உருட்டுக்கட்டைகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதலில் நடத்தியுள்ளனர்.பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சனிக்கிழமை அதிகாலை பெண்கள் தங்கும் சபர்மதி விடுதியில் புகுந்து தாக்குதல் நடந்தியதாக ஜே.என்.யூ மாணவர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.இதேபோல ABVP அமைப்பும், ஜே.என்.யூ மாணவர் அமைப்பை குற்றம் சுமத்தி வருகிறது.தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜே.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் அய்ஷி கோஷ் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “முகமூடி அணிந்தவர்களால் நான் கொடூரமாக தாக்கப்பட்டேன், அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை,” எனக்கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் ஜே.என்.யு.எஸ்.யூ பொதுச் செயலாளர் சதீஷ் சந்திராவும் காயமடைந்தார். ஜே.என்.யு.எஸ்.யூ துணைத் தலைவர் சாகேத் மூன் ABVP தாக்குதலுக்கு தலைமை தாங்கினார் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த சம்பவத்தால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்ததை அடுத்து, ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *