19 வயது மகள்.. குடிவெறியில் சீரழித்த 52 வயது தந்தை.. காப்பாற்றிய அண்ணன்..!

பெற்ற மகள் என்றும் பார்க்கவில்லை.. மனநலம் பாதித்த மகள் என்றும் பார்க்கவில்லை.. தூங்கி கொண்டிருந்த 19 வயது மகளை குடிவெறியில் சீரழித்துள்ளார் தந்தை! இதைதவிர, தன்னுடைய கூட்டாளிகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து போதையில் நாசம் செய்துள்ளார் பெற்ற அப்பா! இப்போது 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை ஓட்டேரி அடுத்த நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு 52 வயதாகிறது. இவரது மனைவி 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் சதீஷ்குமாருக்கு கல்யாணமாகி வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகளுக்கு 19 வயதாகிறது.. ஆனால், அவருக்கு மனநிலை சரியில்லை என கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, செம போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் லோகநாதன்.. அங்கே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நேரத்தில் எதேச்சையாக தங்கையை பார்க்க வீட்டுக்குள் நுழைந்தார் சதீஷ்குமார்.அப்போதுதான் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து, தந்தையை அடித்து வெளுத்து வாங்கினார்.. அங்கிருந்து விரட்டியும் விட்டார்.. உடனே தங்கையை மீட்டு, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.. பின்னர், அயனாவரம் தலைமை செயலக காலனியில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் லோகநாதன் மீது புகார் தந்தார்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடந்தபோது, பெற்ற தகப்பன் லோகநாதன், தன்னுடைய கூட்டாளிகளான ஐய்யாவு, மணி போன்றவர்களையும் வீட்டுக்கு வரவழைத்து, பெண்ணை மது போதையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்தது.இதையடுத்து, 3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று 3 பேருமே ஓட்டேரி சுடுகாட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்தனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *