ஈரான் தளபதி குவாசிம்மை அமெரிக்கா இப்படி துல்லியமாக கொன்றது எப்படி? கருகிய உடல்! அடையாளம் காட்டிய மோதிரம்

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்கா எப்படி கொன்றது? அவரின் உடல் எப்படி அடையாளம் காணப்பட்டது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலால் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே கடுமையான போர் பதற்றம் உருவாகியுள்ளது.இந்நிலையில் குவாசிம் சுலைமான் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், குவாசிம் சுலைமான் உள்ளூர் நேரப்படி இன்று காலை 12.34 மணிக்கு ஒரு விமானம் மூலம் சீரியாவில் இருந்து பாக்தாத்திற்கு வந்துள்ளார். சுலைமான் ஒரு தனியார் விமானத்திலோ அல்லது பயணிகள் விமானத்திலோ வந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

விமானநிலையத்திற்கு வந்திறங்கிய அவர், அதன் பின் கார் ஒன்றில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இரண்டு கார்கள் சென்றுள்ளன.ஒரு காரில் குவாசிம் சுலைமான் மற்றும் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஈரானிய போராளிகளின் தலைவரான Abu Mahdi al-Muhandis இருந்துள்ளனர். இன்னொரு காரில் பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர்.கார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன், இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலே இரண்டு கார்கள் பற்றி எரிந்து கருகின.இதில் குவாசிம் சுலைமான் கையில் அணிந்திருந்த மோதிரம் மூலம் அவர் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், இவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக அமெரிக்க படையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் பின் இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *