நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கூத்தடித்த ஏலியன்..!! தனியாளாக நின்று திகிலில் உறைந்து போன மனிதர்..!

பூச்சி, புழு இவற்றை பார்த்தாலே சிலர் திகிலடைந்து விடுவார்கள். வீட்டுத் தோட்டங்களுக்கு வரும் பூச்சிகளை பார்த்தாலே பயப்படும் மக்கள், இதுவரை பார்த்திராத விசித்திரமான ஒரு பூச்சியை பார்த்தால் என்ன செய்வார்கள்?இந்தோனேசியாவில் பாலிப் பகுதியில் வசிக்கும் ஹேரி டோ என்ற மனிதர், தன் வீட்டுக்குள் வந்த வித்தியாசமான பூச்சியைக் கண்டு அதிர்ந்து போய் போய்விட்டார். வீட்டினுள் மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததாகவும் வெவ்வேறு நீளங்களில் நான்கு உணர்கொம்புகள் இருந்ததாகவும் ஹேரி விளக்கியுள்ளார்.இந்தோனேசியாவில் பாலி பகுதியில் வசிக்கும் ஹேரி டோ என்ற மனிதர், தன் வீட்டுக்குள் வந்த வித்தியாசமான பூச்சியைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். வீட்டினுள் மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததாகவும் வெவ்வேறு நீளங்களில் நான்கு உணர்கொம்புகள் இருந்ததாகவும் ஹேரி விளக்கியுள்ளார்.மேலும், கீழும் அசைந்து கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு பூச்சிகளுக்கு இருப்பதைப் போன்ற கால்களும் இருந்தனவாம்.ஹேரி டோ, அது வாழ்நாளில் தாம் பார்த்திராத ஒன்று என்பதால் அதைப் பற்றி எப்படி விளக்குவது என்பது தெரியாமல், வேடிக்கையாக, வேற்றுகிரக உயிரினம் போல் இருந்தது என்று கூறியுள்ளார். ஹேரி டோ கூறுவது என்ன என்று புரியாமல் மற்றவர்கள் திகைத்தனர்.ஹேரி டோ பார்த்த உயிரினம், அந்துப்பூச்சி வகையை சேர்ந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. அந்துப்பூச்சியினத்தில் ஆர்ட்டைனா என்ற பூச்சிக்குடும்பம் உள்ளது. அக்குடும்பத்தில் உள்ள கிரிடோநோடோஸ் கஞ்சிஸ் என்ற பூச்சியை போன்றே இப்பூச்சியின் சில நடவடிக்கைகள் இருந்ததும் தெரிய வந்தது. இவ்வகைப் பூச்சிகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுபவையாகும்.என்ன தான் அது விசித்திரமாக, பார்க்க பயத்திற்குரிய பூச்சியாக இருந்தாலும், வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வெளியே விரட்டக்கூடாது என்று எண்ணினார் ஹேரி டோ. அந்தப் பூச்சிக்கும் இரவு தங்குவதற்கு ஓரிடம் தேவையாகவே இருந்தது. அந்த இரவை வேற்றுகிரக உயிரினம் போன்று தோற்றமளித்த அந்தப் பூச்சியுடன் கழித்தார் ஹேரி டோ. உண்மையில் ஹேரிடோவின் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *