உரிமையாளரினால் நடுத் தெருவில் கைவிடப்பட்ட நாய்… காரணம் என்ன தெரியுமா..!

கேரளாவில் முதல்முறையாக நம்பமுடியாத காரணம் ஒன்றிற்காக, உரிமையாளரால் செல்லப்பிராணி தெருவில் விடப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.
கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் விலை மதிப்பு மிக்க நாய் ஒன்று பிரபலமான மார்க்கெட்டுக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தது. ஆதரவற்ற நாய்களை போல் அல்லாமல், பார்க்கவே ஸ்டைலாக காலருடன் செய்வதறியாது அந்த நாய் நின்றுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த விலங்கு ஆர்வலர் ஷமீன் அங்கு சென்றார். அந்த நாயின் காலரில் ஒரு குறிப்பு இணைக்கப்படிருந்தது. அந்த குறிப்பை பிரித்து படித்தார்.இதில் ‘இந்த நாய் நல்ல இனத்தைச் சார்ந்தது. இதற்கு அதிகளவு உணவு தேவையில்லை. இதற்கு எந்த நோய்களும் இல்லை. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும். யாரை பார்த்தாலும் குறைக்கும்.3 ஆண்டுகளில் யாரையும் கடித்ததில்லை. முக்கியமாக பால், பிஸ்கட் மற்றும் முட்டைகளை உணவாக கொடுக்கலாம். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு நாயுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுகிறேன்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனை படித்ததும் ஷமீன் படுஷாக் ஆனார். இது குறித்து ஷமீன் கூறும் போது ‘நாய்கள் காயம் அல்லது நோய் காரணமாக கைவிடப்படலாம். ஆனால் சட்டவிரோதமாக உறவு வைத்துக் கொண்டதால் கைவிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்’ எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *