காதலியைத் தேடி மாறுவேடத்தில் 2,400 கிலோ மீற்றர் சென்ற காதலனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

தன் காதலியைப்பார்க்க 2, 400 கிலோமீட்டர் பயணம் செய்து சென்ற காதலனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்புடன், பல்வேறு சிரமங்கள் கடந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுக்க மேற்கொள்ளபட்டடது தான் அந்த 2,400 கிலோ மீட்டர் பயணம். ஆனால், இந்த பயணத்தின் எதிர்பார்ப்புகளெல்லாம் ஒரே நிமிடத்தில் தூள்தூளாகிவிட்டன. இவ்வளவு தூர பயணத்துக்கு பிறகு, தன் காதலியை பார்க்க கரடி உடையணிந்து சென்றுள்ளார் அந்த காதலன். அப்போது அவர் காதலி வேறொருவருடன் இருப்பதைக்கண்டு மனம் நொந்துவிட்டார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்பக்கத்தில் அந்த புகைப்படங்களுடன் தனது கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டை 19, 500 பேர் ரீவிட் செய்துள்ளனர். 80, 400க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த ட்வீட் வெகுவாக வைரலாக, `ஜப்பானில் இப்படியுமா இருக்கிறார்கள்?’ என்று அப்பகுதியினர் கமெண்ட் செய்துள்ளனர்.T_radiosande என்ற ட்விட்டர் ஐடியில் அவர் பகிர்ந்திருந்த ட்விட்டில்,”எனது காதலிக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சீனாவிலிருந்து 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றேன். காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியபடியே சென்றேன். ஆனால், இது முழுக்க ஒரு முட்டாள்தனமான முயற்சி” என்று குமுறியிருக்கிறார்.அவர் பதிவிட்டுள்ள முதல் புகைப்படத்தில், அவருடைய காதலியை மூகமூடியைக் கழற்றாமல் வேறொரு நபருடன் பார்க்கிறார். இரண்டாவது புகைப்படத்தில் தன் முகத்தில் இருந்த கரடி பொம்மை முகமூடியை நீக்கிவிட்டு அந்த பெண்ணை பார்கிறார், அந்த பெண்ணும் அவரை எதிர்நோக்குகிறார்.அருகிலிருக்கும் கடைக்காரர் ஒருவர், சோகத்துடன் முகத்தை மூடும் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது புகைப்படத்தில், மீண்டும் முகமூடியை அணிந்துக்கொண்டு, வந்த பாதையிலே திரும்பி நடையைக் கட்டுகிறார்.காதலனைப்பார்த்த அந்த பெண் அவரை நோக்கி ஓடுகிறார்’. இருவரும் ஆரத் தழுவுவது போன்ற புகைப்படம் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *