கருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம்: நமீதா உருக்கம்

0

திமுக தலைவர் கருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம் என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை நமீதா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கருணாநிதி அளித்த பங்களிப்பு என்றுமே மறக்க இயலாத ஒன்று.

ஒரு நடிகையாக அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். அது என்னால் மறக்கவே இயலாத ஒன்று. அவர் தமிழ் மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கதை, வசனத்தில் கடந்த 2011ல் வெளிவந்த இளைஞன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நமீதா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *