கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தவர் என் அப்பா: ராதிகா சரத்குமார்

0

திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது அப்பா தான் கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார் என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6. 10 மணிக்கு காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொது மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கருணாநிதியின் மறைவால் கவலையில் இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருப்பதாவது,

கருணாநிதி அப்பா என் குடும்பம் போன்றவர். அவர் என் குரு. என் அப்பாவும், கலைஞரும் சேர்ந்து தூக்கு மேடை என்ற நாடக்கத்தில் பணியாற்றினார்கள். என் அப்பா தான் அவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அளித்தவர்.

கருணாநிதி இல்லாத தமிழ் அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் எப்பொழுதுமே தமிழ் உணர்வுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பவர் என்றார்.

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அறிந்த ராதிகா நிம்மதி அடைந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *